மண்புழுக்கள்

                                    நாட்டு மண்புழுக்கள் ஏன் அவசியம்

நாட்டு மண்புழுக்கள் 16 வருடங்கள் உயிர் வாழக்கூடியவை. தனது வாழ்நாள் முழுதும் நாள்தோறும் 20 மணி நேரம் மண்ணைத்தோண்டி எண்ணில் அடங்காத துவாரங்களை மண்ணில் உருவாக்குகிறது, இந்த துவாரங்கள் மழை நீர் நிலத்தில் செல்வதற்கு வழி ஏற்படுத்துகிறது. இதனால் நதிகளும், ஓடைகளும், கிணறுகளும் மற்ற நீர் நிலைகளும்  நிறையக் காரணமாகிறது. நிலத்தடி நீர் அதிகரிக்கஅதிகரிக்க நீர் நிலைகளில் நீரும் அதிகரிக்கிறது.

             

நாட்டு மண்புழுக்களின் எச்சங்கள் அல்லது கழிவுகள் ஊட்டசத்துக்களின் கடல் இவை தாவரங்களுக்கு எளிதாக கிடைக்கக்கூடிய நிலையில் உள்ளது.  நாட்டு மண்புழுக்கள் மண்ணில் தொடர்ந்து துளையிட்டுச் செல்கின்றன. மண்ணில் பதிணைந்து அடி ஆழத்திற்கு துவாரங்களை உருவாக்குகின்றன. இவை மண்ணில் துளை இடும் போது அவை அதே துவாரத்தில் மீண்டும் வராமல் புதிய துளையை ஏற்படுத்தி வெளியில் வந்து அதன் கழிவுகளை மண்ணின் மேல் பரப்பில் இடுகின்றன.

கழிவுகளை வெளியேற்றிய பிறகு அவை மீண்டும் ஒரு புதிய துளையை ஏற்படுத்தி மண்ணிற்குள் சென்று மீண்டும் ஒரு புதிய துளையை ஏற்படுத்தி வெளியில் வருகிறது. இப்படி தொடர்ச்சியாக நடப்பதால் புதிய புதிய துளைகளை ஏற்படுத்துகின்றன. மீண்டும் மீண்டும் எச்சங்களை மண்ணின் மேல் பரப்பில் வெளியிடுகிறது. இத்தகைய தொடர்ந்த செயல்களால் அவை எண்ணில் அடங்காத துவாரங்களை மண்ணில் ஏற்படுத்துகின்றன. இதனால் மண் இந்த துவாரங்களால் நிறைந்து மண்ணில் ஒரு துவார வலை ஏற்படுகின்றது.



இப்படி நாட்டு மண்புழுக்கள் துளை ஏற்படுத்தும் போது பசை போன்ற நொதியை (vermiwash) மண்ணில் வெளியிடுவதினால் இந்த துவாரங்களில் உட்புற சுவர்கள் இந்த பசையினால் பூசப்படுகிறது.

அந்த துளைகள் மீண்டும் அடைக்காத விதமாக வலுவாகிறது. பூமியின் அழுத்தத்தினால் அத்துளைகள் அடைபடுவதில்லை. இந்த துவாரங்கள் நிலையானவையாக இருக்கின்றன. இப்பெரிய வலைப்பின்னல்  மூலமாக மழைநீர் முழுவதும் நிலத்திற்குள் சேமிக்கப்படுகிறது. பெருமழை பொழிந்தாலும் தண்ணீர் முழுமையாக உள்ளிழுக்கப்படுகிறது. இதனால் மண்ணில் நீர் நிலைகள் நிறம்புகிறது.

மண்புழுக்கள் சுரக்கும் திரவத்தில் தாவர வளர்ச்சிக்த் தேவையான நொதிகள். அமினோ அமிலங்கள் மற்றும் கரிம நொதிகளும் உள்ளன. இந்த துவாரங்கள் வழியாக நிலத்தில்மழை நீர் முழுமையாக  சேமிக்கப்படும்போது மண் அரிப்பு நடக்காது. நிலத்தில் தண்ணீர் ஓடுவதில்லை.

வானத்தில் இருந்து மழை பொழியும்போது மழைநீர் தெளிவாக இருக்கிறது. ஆனால் மண்ணின் மேற்பரப்பில் நீர் ஓடும்போது தண்ணீர் நிறம் கருப்பாகிறது ஏனெனில் இந்த ஓடும் நீருடன் மக்கு மற்றும் வளமான மண் துகள்களும் கரைந்துள்ளன. இவை வண்டல் மண்ணாக நீர் நிலைகளில் படிகிறது. பல கோடிகள் செலவு தூர்வாரப்படும் நீர்நிலைகளில் இப்படி வண்டல் மண் படிவது அவசியமற்ற பொருளாதார சேதமாகும். மேலும் இவ்விதம்  மண் அரிப்பு தொடர்ந்து நடைபெற்றால் நிலவளம் அழிந்து போகும்.

நாட்டு மண்புழுக்கள் மழை நீர் சேமிப்பை, நீர் பிடிப்பு மேலாண்மையை செலவில்லாமல் நமக்கு செய்து தருகின்றன. டிராக்டர் போன்ற அசுர சாதனங்களால் 9 அங்கும் வரை மட்டுமே உழமுடியும். டிராக்டர் மண் தன்மை, மண் அமைப்பு, மண்வளத்தையும் அழிக்கிறது. நாட்டு மண்புழுக்கள் மண்ணில் நீரை சேமிக்கிறது மண் வளத்தை அதன் கழிவுகளால் கூட்டுகிறது. சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாய முறையில் நாட்டு மண்புழுக்களே நமது டிராக்டர்.

நாட்டு மண்புழுக்கள் மண்ணில் துளையிட்டு செல்லும் போது அவை மண்ணை உட்கொண்டு மண், கல், மணல், சுண்ணாம்புக்கல் மற்றும் கேடுவிளைவிக்கும் நுண்ணுயிகளையும் உட்கொள்கின்றன. தீமை செய்யும் பேக்டீரியாக்கள் அழிகின்றன. நன்மை செய்யும் பேக்டீரியாக்கள் கழிவில் திறனடைந்து கழிவில் வெளியிடப்படுகின்றன. அதன் வயிற்றில் கற்கள் அரைக்கப்பட்டு மண்ணின் மேற்பரப்பில் கழிவாக வெளியிடப்படுகிறது.

நம் கோட்பாட்டின் படி ஆழத்தில் உள்ள மண் ஊட்டசத்தின் கடல், நாட்டு மண்புழுக்கள் ஆழத்தில் உள்ள மண்ணை உண்ணும் போது ஆழமான மண்ணில் கிடைக்கும் ஊட்டசத்தையும் உண்பதால் நாட்டு மண் புழுவின் எச்சம் ஊட்டசத்துக்களின் கடலாகிறது. சிலிகா தாவரத்தின் வலுவிற்கு அவசியமாகிறது. மண்புழுக்கள் மணலை உட்கொள்ளும்போது சிலிகாவும் மண்ணில் சேர்கிறது. சுண்ணாம்புக் கல்லை உட்கொள்ளும் போது சுண்ணாம்பு சத்து மண்ணில் சேர்கிறது.

இருவித்திலை பயறு வகைகளைச்சேர்ந்த தாவரங்கள் (லெகுமினேசி / பாபிலினோசி) குடும்பத் தாவரங்ஙள் நைட்ரஜனை காற்றில் இருந்து எடுத்துக்கொண்டு மண்ணில் நைட்ரேட் வடிவில் சேர்க்கிறது. நாட்டு மண் புழுக்கள் இந்த நைட்ரேட்டை உண்பதின் மூலம் மண்ணிற்கு நைட்ரஜனும் கிடைக்கும். கால்சியம் பாஸ்பேட்டும் இதன் எச்சத்தில் சேர்கிறது. பொட்டாஷ் சத்தையும் மண்ணில் விடுகிறது.

அப்படியானால் நாட்டு மண்புழுக்களின் எச்சம் அனைத்து ஊட்டசத்துக்களின் ஆதாரமாகும். மண் புழு உண்டாக்கும் மண்ணில் உள்ள நைட்ரஜன் மண்புழு இல்லாத நிலத்தை விட 7 மடங்கு அதிக நைட்ரஜன் உள்ளது. பாஸ்பேட் 9 மடங்கு அதிகமாகவும், பொட்டாஷ் 11 மடங்கு அதிகமாகவும், சுண்ணாம்பு சத்து 6 மடங்கும், 8மடங்கு அதிகமான மெக்னீசியமும். 10  மடங்கு அதிகமான சல்பரும் உள்ளது. மேலும் பல்வேறு சத்துக்களைக் கொண்டு  ஊட்டசத்துக்களின் கடலாக உள்ளது.

மிகப்பெரிய மழை வந்தாலும் மண்புழுவின் எச்சங்கள் மண்ணில் கரைவதில்லை. அந்த எச்சங்கள் மண்ணின் மேல்பரப்பில் அப்படியே இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் மண்ணில் புதிய அடுக்கு தோன்றுவதால்மண்ணில் அதிகமான சத்து சேர்ந்து புதிய உயிர்த்தன்மை நிறைந்த மண் உண்டாகிறது. இதை நாம் நேரடியாக காடுகளில் காணமுடியும்.



காற்று இந்தமண்புழு துவாரங்களின் வழியாக செல்லும் போது மண் காற்றோட்டம் நிறைந்ததாகிறது. இதனால்தொடர்ந்து ஆக்சிஜன் கிடைக்கிறது. காற்றில்லா சுவாசம் செய்யும் பாக்டீரியாக்களால் வெளியிடப்படும் அமோனியா, கார்பன் டை ஆக்கசைடு, மீத்தேன் போன்ற விஷ வாயுக்கள் இந்த துவாரங்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது. நாட்டு மண் புழு இறந்த பின் அவற்றின் உடல்களும் மண்ணிற்கு ஊட்டசத்தாகிறது.

ஹெஸ்னியோ போடிடா (hesnio foetida) என்னும் உரம் தயாரிக்கப் பயன்படும் புழு மண்புழுவே அல்ல. இது மண்ணின் மேல்பரப்பில் மட்டும் உணவு உட்கொள்ளும். மண் புழுவிற்கு 16 குணங்கள் உண்டு, அதில் எந்த ஒரு குணமும் ஹெஸ்னியோ போடிடா புழுவிற்கு இல்லை.  இது அபாயகரமான ஒருபுழு.

மட்கு உருவாக்கும் நுண்ணுயிர்கள் மற்றும் நாட்டு மண்புழுக்கள் இவையே தாய்மண்ணின் முதுகு தண்டாகும். இவை இயற்கையின் தூதவர்கள் அவற்றை மண்ணிலும் நிலத்திலும் பெருகச் செய்யவேண்டும், எப்படி பெருகச்செய்வது, அதற்கு சரியான உணவு கொடுத்தால் பெருகும். என்ன
உணவு கொடுப்பது?

No comments:

Post a Comment